இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியை கன்சர்வேட்டிவ் பின்னுக்கு தள்ளியது

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியை ஆளும் கன்சர்வேட்டிங் கட்சி பின்னுக்கு தள்ளியது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகும் முடிவை எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை 19–ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், நாட்டில் வலிமையான, ஸ்திரமான தலைமை தேவை என கூறி, பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்த பிரதமர் தெரசா மே (வயது 60) முடிவு செய்தார். அவரது முடிவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. எனவே இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தாலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜூன் 8–ந் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவியது. கன்சர்வேடிவ் கட்சிக்காக பிரதமர் தெரசா மே, தொழிற்கட்சிக்காக ஜெர்மி கார்பின் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். இதற்கு மத்தியில்தான் மான்செஸ்டர் நகரிலும், லண்டன் மாநகரிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து, நாட்டில் அதிர்வலைகள் ஏற்பட்டன. இதன்காரணமாக இடை இடையே பிரசாரம் நிறுத்தப்பட்டாலும், மீண்டும் தொடர்ந்து நடந்தது.
இந்த நிலையில் நேற்று மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு) ஓட்டுப்பதிவு முடிந்தது. ஓட்டுப்பதிவு முடிந்த சிறிது நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது. தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிங் பின்னடைவை சந்தித்தது.
கன்சர்வேட்டிங் பின்னடை சந்தித்ததும் தொழிலாளர் கட்சியின் ஜெர்மி கார்பின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தெரசா மே தனது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து பேசிய ஜெர்மி, “தெரசா மே தனது கன்சர்வேட்டிவ் தொகுதிகளை இழந்துள்ளார். வாக்குகளை இழந்துள்ளார். ஆதரவு மற்றும் நம்பிக்கையை இழந்துள்ளார். அவர்கள் வெளியேறுவதற்கு இதுவே போது என்று எனக்கு தோன்றுகிறது” என்றார். ஜெர்மி தான் போட்டியிட்ட இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தெரசா மேவும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் கன்சர்வேட்டிங் இங்கிலாந்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என்றார் தெரசா மே.

தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதில் தெரசா மேயின் கர்சர்வேட்டிங் கட்சி முன்னிலை பெற்று உள்ளது. மொத்தம் 650 பாராளுமன்ற தொகுதிகளில் 577 தொகுதிகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்சர்வேட்டிங் கட்சி 272 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. தொழிலாளர் கட்சி 241 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி, பெருந்தோல்வியை சந்தித்து உள்ளது.
இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றும் தெரசா மே பெரும்பான்மையை இழக்கிறார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கள் தெரிவித்தன, அதனை நோக்கியே தேர்தல் முடிவு பயணம் செல்கிறது என தெரிகிறது.

Related posts

Top