பாலஸ்தீன குழந்தைக்கு பால்கொடுத்த யூத பெண்

விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலஸ்தீன முஸ்லிம் பெண்ணொருவரின் 9 மாத ஆண் குழந்தைக்கு இஸ்ரேல் இனத்தவரான யூத நர்ஸ் பாலூட்டிய சம்பவம் உலகில் மக்களின் மனதை
பாலஸ்தீன பெண், அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இஸ்ரேல் நாட்டின் இன் கரீம் பகுதியில் வாகன விபத்தில் சிக்கியுள்ளனர்.சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார், அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

உடனடியாக செயற்பட்ட இஸ்ரேலிய மருத்துவ உதவியாளர்கள் படுகாயமடைந்திருந்த பெண் மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் ஹதாஸ் எலின் கரீம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு உலா ஒக்ஸ்டேராவிஸ்க் சக் என்ற நர்சிடம் வழங்கப்பட்டது.

குழந்தைக்கு புட்டி பால் ஊட்ட அவர் பல மணிநேரம் முயற்சித்துள்ளார். முயற்சி தோல்வியடைந்ததால், அவரே குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.விபத்து குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் விபத்துக்கு உள்ளான பெண்ணின் மூத்த சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

பாலஸ்தீன இனத்தவர்களான குடும்பத்தினர், நர்சின் செயலை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். அதனை தாங்கிக்கொள்ள முடியாது, குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலூட்டிய யூத நர்ஸ், தான் குழந்தைக்கு 5 தடவைகள் பாலூட்டியதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அனைவரது மனதிலும் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பெரியம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் குழந்தையை பாராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Top