யேர்மனியில் தாக்குதல்…பலர் காயம் என தகவகல்

ஜெர்மனியின் முனிச் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனி நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் முனிச் நகர ரயில்வே நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம் அடைந்தனர்.

அங்குள்ள ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியது போலீசாரா அல்லது பொதுமக்களில் யாரோ ஒருவரா என்ற குழப்பமும் நீடிக்கிறது.

துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையடுத்து சம்பவம் நடந்த ரயில் நிலையத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களில் ஒரு பெண் போலீசாரும் அடங்குவார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று முனிச் நகர காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதல் இல்லை என பவாரியன் ரேடியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முனிச் தாக்குதலுக்கு மதம் அல்லது அரசியல் உள்நோக்கம் இல்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related posts

Top