விக்னேஸ்வரனை கடுமையாக எச்சரிக்கும் தமிழரசு கட்சி!

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை மாற்­று­வ­தாக இருந்­தால் முத­ல­மைச்­சர் உட்­பட 5 அமைச்­சர்­க­ளை­யும் மாற்­று­வது குறித்­துப் பங்கா­ளிக் கட்­சி­க­ளும் தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்று தமிழ் அர­சுக் கட்சி எச்­ச­ரித்­துள்­ளது.

“நான்கு அமைச்­சர்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நீக்க முற்­பட்­டால், ஒட்­டு­மொத்­த­மாக 5 பேரை­யும் நீக்­கி­விட்டு புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்க வேண்­டும் என்று எங்­க­ளி­டம் பல தரப்­பும் கோரிக்கை – அழுத்­தங்­களை முன்­வைத்­துள்­ளன. நான்கு அமைச்­சர்­க­ளை­யும் மாற்­றும் முடிவை அவர் எடுத்­தால், அந்­தக் கோரிக்­கை­கள் கட்­டா­யம் பரி­சீ­லிக்­கப்­ப­டும்”­என்று இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராசா காட்­ட­மா­கத் தெரி­வித்­திருக்கின்றார்.

வடக்கு அமைச்­சர்­கள் விவ­கா­ரம் தொடர்­பில் தமிழரசுக்கட்சி ஊடகம் ஒன்றுக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா மேலும் கூறி­ய­தா­வது,

விசா­ர­ணைக் குழு அறிக்கை அடிப்­ப­டை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுக்­கட்­டும் என்றே நாம் ஒதுங்­கி­யி­ருந்­தோம். அந்த விசா­ர­ணைக் குழு அவ­ரால் அமைக்­கப்­பட்­டது. அது அவ­ருக்கு பரிந்­து­ரை­களை முன்­வைத்­தது. அதன் பிர­கா­ரம் முடிவு எடுக்க வேண்­டி­ய­வர் அவர்­தான். அத­னால்­தான் நானோ, கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தனோ இந்த விட­யங்­க­ளில் தலை­யி­டு­வ­தில்லை என்று வில­கி­யி­ருந்­தோம்.

நாம் ஒதுங்­கி­யி­ருப்­பது தவறு எனப் பல­ரும் எம்மை விமர்­சிக்­கின்­ற­னர். இதே­வேளை, அமைச்­சர்­கள் நான்கு பேரை­யும் நீக்­கி­விட்டு தனக்கு வேண்­டி­ய­வர்­களை நிய­மிக்க முத­ல­மைச்­சர் முயல்­வ­தா­க­வும் எமக்­குப் பல­ரும் முறைப்­பா­டு­கள் தெரி­வித்­துள்­ள­னர். நான்கு அமைச்­சர்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் மாற்­றம் செய்­வ­தா­னால் அவ­ரும் பதவி விலக வேண்­டும்.

புதிய அமைச்­ச­ர­வை­யைக் கட்சி நிய­ம­னம் செய்ய வேண்­டும் என்று பல­ரும் எமக்கு கோரிக்கை விடுக்­கின்­ற­னர். முத­ல­மைச்­சர் நாளை (இன்று) என்ன செய்­யப் போகின்­றார் என்­ப­தைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம். அவர் 4 அமைச்­சர்­க­ளை­யும் மாற்­றி­னால், எமக்கு விடுத்த கோரிக்கை பரி­சீ­லிக்­கப்­ப­டும்.
முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­கள் விவ­கா­ரத்தை சபைக்­குள் முடித்­தி­ருக்க வேண்­டும்.

அதற்கு விசா­ர­ணைக் குழு அமைத்து இன்று விட­யம் பகி­ரங்­க­மா­கி­யி­ருக்­கின்­றது. இத­னால் மாகாண சபைக்கு மாத்­தி­ர­மல்ல, கட்­சிக்­கும் அவப் பெயர்­தான். கட்­சி­யைத் தலை­கு­னி­யச் செய்­கின்ற செயற்­பாட்­டையே அவர் செய்­தி­ருக்­கின்­றார். விசா­ர­ணைக் குழு குற்­ற­மி­ழைத்­த­வர்­கள் என்று இரு­வரை அடை­யா­ளப்­ப­டுத்தி பரிந்­து­ரைத்­தி­ருக்­கின்­றது. அந்­தப் பரிந்­து­ரை­யைச் செயற்­ப­டுத்­து­வதா? இல்­லையா? என்­பது முத­ல­மைச்­ச­ரைப் பொறுத்த விட­யம். ஆனால் குற்­ற­மி­ழைத்­தோ­ரைப் பாது­காப்­ப­தற்­காக நிர­ப­ரா­தி­க­ளைத் தண்­டிக்­கக் கூடாது.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னைப் பாது­காக்­கும் வகை­யில் செயற்­பட்­ட­வர். அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கத்தை சிக்க வைக்­கும் நோக்­கு­ட­னேயே விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. இப்­போது விசா­ர­ணைக் குழு மீது குற்­றம் சுமத்­தத் தொடங்­கி­யி­ருக்­கின்­ற­னர். ஆனால் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், விசா­ர­ணைக் குழு சரி­யா­கத்­தான் செயற்­பட்­டது என்று சொல்­லி­யி­ருக்­கின்­றார்.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், நான்கு அமைச்­சர்­க­ளை­யும் மாற்­றம் செய்ய வேண்­டும் என்று கூறி­னால், ஒட்­டு­மொத்த அமைச்­ச­ர­வை­யை­யும் புதி­தாக நிய­மிக்க, நாம் கட்­சித் தலை­மை­யு­ட­னும், ஏனைய பங்­கா­ளிக் கட்­சி­க­ளு­ட­னும் பேசு­வோம் – என்­றார் என்று அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Top