ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும்! – சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு கருத்துத்தெரிவித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

மதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில், தான் எவ்வளவு தொகை வாங்கினார் என்பதை தெரிவிக்கவில்லை. அதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

அதே வேளையில் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன்அன்சாரி நிச்சயம் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அதனை அவரிடம் உறுதி செய்துள்ளேன்.

சரவணனின் கருத்துக்கு, தமீமுன் அன்சாரி தவிர வேறு யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கட்சியால் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த கட்சியே பிரச்சினையாக தான் உள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பது அவரவர் விருப்பம். ஆனால், எங்களின் கருத்து இந்த மண்ணை ஆளும் உரிமை தமிழருக்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தை பா.ஜ.க.தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2019 வரை தேர்தல் வர வாய்ப்பில்லை. பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது.

இல்லாவிட்டால் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு மத்திய பா.ஜ.க. அரசு தமிழக அரசை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அமல் படுத்தும். அதன்பின்னர் நேரடியாக பா.ஜ.க. தன் ஆளுமையின் கீழ் தமிழகத்தை கொண்டுவந்து எங்களை போன்ற அவர்களுக்கு எதிரானவர்களை நசுக்கும் வேலையை செய்யும். இவ்வாறு கூறினார்.

ஈழதேசம் இணையம்.

Related posts

Top