பேரவை தவறினால் முன்னணி களமிறங்கும்!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஓரம் கட்;டுவதற்காக அரசாங்கம் மற்றும் தமிழ் இனத்துரோகியுடன் இணைந்து தமிழரசு கட்சி செய்யும் சதிவேலையால் தமிழ் தேசமானது வாழ்வா? சாவா? என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சதித்திட்டத்தினால் பழிவாங்கப்படும்; முதலமைச்சருக்காக அனைத்து தரப்பினர்களும்; அணிதிரளவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற விடயங்கள் ஊழல் சம்மந்தப்பட்டவை இல்லை என்பதை நாங்கள் தெளிவாகவும் ஆணித்தனமாகவும் கூறுகின்றோம்.
ஊழலின் பெயரால் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகும். முதலமைச்சர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தமிழ் தேசியத்திற்கு வாழ்வா? சாவா? என்ற நிலைப்பாட்டினை தோற்றுவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நாங்கள் வெளியேறி தனியாக இயங்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே. தமிழ் மக்களுக்கான தீர்வினையும், தமிழ் அரசியலை 13 இற்குள் முடக்குவதற்காக அரசிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலமைகள் விலைபோய்விட்டார்கள் என்று தெரிவித்து வந்தோம்.
வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் நாம் முன்வைத்த கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருந்தது,
வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிட்டு வெற்றியீட்டிய பின்னர் ஆரம்ப காலத்;தில் அவர் மேற்கொண்ட செற்பாடுகள், அவரின் கருத்துக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கொள்கைக்கு துணைபோவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தோம்.
இருப்பினும் இதன் பின்னரான காலப்பகுதியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,தாமாக முன்வந்து தமிழ் மக்களுக்கு நiபெற்றது, நடைபெற்றுக் கொண்டிப்பது இனப்படுகொலைதான் என்பதை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றினை வடமாகாண சபையில் கொண்டுவந்து ஏகமனதாக நிறைவேற்றியிருந்தார்.
பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் வலி.வடக்கு காணி விடுவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன கலந்து கொண்ட போது, அதே மேடையில் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற தனது கொள்கை பிரகடனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

முதலமைச்சரின் இக்கொள்கையினை முழுமையாக நாம் ஏற்றுக் கொண்டோம். முதலமைச்சர் தலமையை ஏற்று செயற்பட தயாராக உள்ளோம் என்பதையும் வெளிப்படையாக அறிவித்திருந்தோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலமைகளின் கொள்கையை ஏற்று முதலமைச்சர் செயற்பட்ட காலங்களில் அவரை ஒரு பெரும் தலைவராக தமிழ் மக்களுக்;கு காண்பித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அவர் தனது கொள்கை நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி அதன் வழி செயற்பட்டு வருகின்ற நிலையில், முதலமைச்சரை வடமாகாண சபையில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் செயற்பாட்டினை இரா.சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும், அவர்களின் அடிவருடிகளாக,கும்பலும் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.இந்த கும்பல்தான் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கு கடுமையான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
இன்று வடமாகண சபையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களுக்கு உண்மையான பிண்ணணி கொள்கைதான். முதலமைச்சர் ஒரு தெளிவான, உறுதியான முடிவுகளை எடுத்து, தமிழ் தேசத்தின் நலன்களை முன்னிறுத்தி என்று செயற்பட ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து தமிழரசு கட்சியின் தலைமைக்கு ஒரு துரோகியாக பார்க்கப்பட்டார்.

தமிழ் இனத்திற்கு சாதகமான எந்த அளவிற்கு செயற்பட ஆரம்பித்த போது, அந்த அளவிற்கு அவர் தமிழரசு கட்சிக்கு துரோகியாக மாறியிருந்தார்.
இந்த பின்னணியில்தான் முதலமைச்சர் சி.வி.வின்னேஸ்வரன் ஒட்டுமொத்த பொது அமைப்புக்கள், கொள்கையுடன் உறுதியாக செயற்படும் அரசியல் கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்றினை உருவாக்கியிருந்தார்.
இதனூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆணித்;தரமாக இதுவரை முன்வைக்காத தமிழ் மக்களுக்கான, தேசத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு தீர்வு திட்டம் ஒன்றினை முன்வைத்திருந்தார். மேலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் வகையில் பெங்குதமிழுக்கு நிகரான எழுக தமிழை முன்னின்று நடத்தியிருந்தார்.

வடக்கு, கிழக்கில் எழுக தமிழ் மூலம் தமிழ் சமூகம் ஒன்றுதிரண்டதை பார்த்த பின்;தான் 2016 ஆம் ஆண்டு ஒற்றையாட்சிக்குள் முடக்கும் அரசியல் தீர்வுத்திட்டத்தினை வெளிப்படுத்தாமல் விட்டது.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான சதியினை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலையில் தமிழரசு கட்சியினர் இறுகியிருக்கும் காலகட்டத்தில்தான் முதலமைச்சரை பதிவியில் இருந்து விலத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வருகின்றார்கள்.
இதன்படிதான் முதலமைச்சரை தனிமைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தினை எடுத்து,முதலமைச்சருக்கு வடக்கு மாகாண சபையில் உறுதுணையாக இருக்கக் கூடிய அங்கரநேசனை குறிவைத்து,இந்த ஒழுக்காற்று நடவடிக்கையினை தமிழரசு கட்சியினர்தான் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் ஒட்டுமொத்த அமைச்சர்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளது,எனவே அனைத்து அமைச்சுக்கள்; மீதான விசாரணையினை முன்னெடுக்க முதலமைச்சர் முடிவு செய்திருந்தார்.

இச்செயற்பாடு தமிழரசு கட்சியின் செல்லப்பிள்ளையாக இருந்த குருகுலராஜா,டெனிஸ்வரன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படப்போதை அறிந்த தமிழரசு கட்சியினர் சாட்சியப் பதிவுகளை தடுத்தார்கள்.
ஊழலை தடுப்;பதற்கு முதலமைச்சர் எடுத்த முடிவினை தடுத்து, திருடர்களை காப்பாற்றுவதற்கு, தமிழரசு கட்சி இன்று செயற்பட்டு வருகின்றது. திருடர்கள் ஒழிந் நிற்கக் கூடிய குகையாக தமிழரசு கட்சி இன்று மாறிள்ளது.
முதலமைச்சரின் கொள்கை பாதையினை தேற்கடிப்பதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடனும்,ஈ.பி.டி.பி ஆகிய தமிழ் இனத்தினை காட்டிக் கொடுத்தவர்களுடன் இணைந்துள்ளது.

தமிழரசு கட்சியின் இச் செயற்பாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள்கூட சம்மதிக்கவில்லை.
முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பின்னின்று செயற்படுகின்றது.குறிப்பாக அண்மையில் சரத்பென்சேகா முதலiமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிகின்றது என்று தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்களில் இருந்து முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்தல்கள் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
துமிழ் மக்களுக்கான கொள்கையின்பால் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சர சி.வி.வின்கேஸ்வரனுக்கு எதிராக எடுக்கப்படும் சாதித்திட்டங்களுக்கு எதிராக அணைவரும் அணி திரள வேண்டும்.

ஆதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்க வேண்டும். பேரவை முதலமைச்சருக்கான ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை முன்னெடுக்கும் என்றார்.

முதல்வர் விக்னேஸ்வரன் மீதான நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஊடகவியலாளர் சந்திப்பு

Posted by Eeladhesam News on Donnerstag, 15. Juni 2017

Related posts

Top