ஹர்தாலுக்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு

ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டிணைந்து தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி அரசியலமைப்பை திணித்து அதற்கு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி மேற்கொள்ளும் சதிமுயற்சிக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக ஒத்துழைக்க மறுத்து வருவதாலும்,

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்பதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதனாலும்

திட்டமிட்ட ரீதியில் முதலமைச்சரை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழரசுக் கட்சி எதேச்சாதிகாரமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை 16-06-2017 அன்று தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பில் வடமாகாணம் முழுவதும் நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரணமாக ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.

இக் ஹர்தாலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்து வர்த்தக நிலையங்கள், பாசடாலைகள், பல்கலைக்கழகங்கள், நிதி நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், தனியார் துறை நிறுவனங்கள், அரச, தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் நிறுத்தி ஒத்துழைக்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Related posts

Top