முல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 04.10.17 அன்று இரவு கொக்குளாய் கடற்பரப்பில் படகு ஒன்றுடன் தொழிலுக்கு சென்ற சிறீபுரம் பதவியா வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த 32 அகவையுடைய ஜெயசூரிய ஆரச்சிகே சம்பத்குமார என்ற கடற்தொழிலாளி படகு ஒன்றில் கடற்தொழிலுக்கு சென்றுள்ளார்.இவரது படகு 05-10-17 அன்று கொக்குளாய் கடற்பரப்பில் கரை ஒதுங்கியிருந்தது.

இந்த நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின்
புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற நபர்களை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில் உடையில் சென்ற பொலிசார் மிக

About காண்டீபன்

மறுமொழி இடவும்