இராஜினாமா கடிதத்தை கையளித்தார் ஐங்கரநேசன்

வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவிற்கமைய ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர் பொன்னுதுரை ஐங்கரநேசன் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் 15ஆம் திகதி தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

எனினும், குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா தமது பதவி விலகல் கடிதத்தை இதுவரை கையளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்ட அமைச்சர்கள், இதுவரை தமது விடுமுறை கடிதங்களை கையளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

முதலமைச்சரின் மேற்படி அறிவித்தலை தொடர்ந்து, முதலமைச்சருக்கு எதிராக மாகாண அமைச்சர்களினால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதுடன், வட. மாகாண அரசியலில் பாரிய குழப்பநிலை தோற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top