இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி தமிழக மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த கைதினைத் தொடர்ந்து இராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

61 நாட்கள் தடைக் காலம் முடிந்து கடந்த 14ஆம் திகதி தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதோடு, வழமைபோன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகை கைபற்றியதோடு அதிலிருந்த 5 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Top