முட்டாள் சயந்தனால் பிரச்சினை –சிவயோகன்!

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்ற உறுப்பினரா? இல்லையா என்பது கூட தெரியாத முட்டாள் சயந்தனால் தான் இவ்வளவு பிரச்சினைகள் என மனம் திறந்துள்ளார் தமிழரசுகட்சியின் மாகாணசபை உறுப்பினர் சிவயோகன்.ஓய்வு பெற்ற பொறியியலாளரான அவர் இன்று இரவு தனது துன்னாலை கலிகையிலுள்ள வீட்டினில் ஊர் பொது அமைப்பு பிரதிநிதிகளை சந்திதத போதே இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரைப் பதவிநீக்கும் போராட்டம் தொடரும். நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அது முடியாமல் போனால் இரண்டாவது தெரிவைப் பிரயோகித்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பதவியிலிருந்து அகற்றுவோம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரைப் பதவிநீக்குவதற்கு நாங்கள் மூன்று வழிமுறைகளை வைத்திருக்கின்றோம். அதன் ஒரு வழிமுறைதான் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அது நம்பிக்கையில்லாத் தீர்மானம். அதில் தோல்வியடைந்தால் இன்னமும் இரண்டு வழிமுறைகள் உள்ளது.

ஆனாலும் கூட எமக்கு சாதகமான முறையில் சமரசத்திற்கான நம்பிக்கை ஒளிக்கீற்றுத் தென்பட்டால் அதனைப் பற்றிப் பிடித்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்ற உறுப்பினரா? இல்லையா என என ஊடகவியலாளர் ஒருவர் மீண்டும் அழுத்தமாகக் கேட்டபோது ஊடக சந்திப்பை முடித்துக்கொள்வதாக அவர் எழுந்து சென்றிருந்தார்.

இது பற்றி சிவயோகனிடம் ஊர்; பிரதிநிதிகள் கோரிய போதே முட்டாள் சயந்தனால் இவ்வளவு பிரச்சினையென தெரிவித்தார்.எங்களையும் குழப்பி தனது சுயநல அரசியலை சயந்தன் அரங்கேற்ற முற்பட்டமையால் நாங்கள் தற்போது வீடுகளினில் முடங்கியிருக்கின்றோமென அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Related posts

Top