தென்னிலங்கையின் எடுபிடியே சி.வி.கே.சிவஞானம்!

சி.வி.கே.சிவஞானம் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் எடுபிடியாகவே காலங்காலமாக இருந்து வருகின்றார். ஜே.ஆர் ஜெயவர்த்தன காலத்தில், விடுதலைப் புலிகள் பத்மநாதனை இடைக்கால நிர்வாகத் தலைவராக தெரிவுசெய்தபோதும், ஜே.ஆர். சி.வி.கே சிவஞானத்தையே இடைக்கால நிர்வாகத் தலைவராக நியமிக்கமுடியும் என அழுங்குப் பிடியாக நின்றார் என்பது வரலாற்றுப் பதிவு.

இதனை, மறைந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தனது போரும் சமாதானமும் என்ற நூலில் பதிவுசெய்திருக்கின்றார்.

தற்போதும், ரணில் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும், சுமந்திரனூடாக சி.வி.கே.சிவஞானத்தை மீண்டும் முதலமைச்சர் சிம்மாசனத்தில் இருத்துவதற்காக தமிழரசுக் கட்சி துணைபோயுள்ளதாக சிவகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்காக மாவை சேனாதிராஜா அடிப்படைக்கட்டமைப்போடிருந்த தமிழரசுக் கட்சியை அழித்து சின்னாபின்னமாக்கியதோடல்லாமல், தனது தலையில் தானே மண்ணையும் அள்ளிக்கொட்டியுள்ளார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

Top