வடக்கு மாகாண அவைத் தலைவருக்கு சோழர் கால அரசர்களைப் போன்ற சிம்மாசனம்

வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருக்காக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் நாள் நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில், புதிய சிம்மாசனத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அமர்ந்திருந்தார்.

இதுகுறித்து கொசுறுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, சோழர் கால அரசர்கள் பயன்படுத்தியதைப் போன்ற ஆசனத்தை மாகாணசபையின் உயர் அதிகாரி ஒருவர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Related posts

Top