ரஜனிகாந்தை புகழப்போய் நகைப்புக்குள்ளாகி இருக்கும் திருமா.

அடிமேல் அடிவாங்கி எல்லோராலும் கைவிடப்பட்டு அரசியல் வங்குரோத்தில் நிற்கும் தொல் திருமாவளவன் தனது அரசியல் வறட்சியை நிவர்த்தி செய்யும் நோக்கில் சினிமா நடிகர் ரஜினிகாந்த் அவர்களை பூலோகத்தின் புனிதன் என்றும், இந்தியாவுக்கான சர்வரோக நிவாரணி என்றும், வானில் இருந்து இறங்கி வந்த அபூர்வ ரட்சகர் என்றும் பேசப்போக,

தமிழக காட்சி ஊடகங்கள் நேர்முக நிகழ்ச்சிகளில் கழுவி கழுவி ஊற்றுகின்றன. ஊடக நெறியாளர்களின் கேள்விக்கு விடை சொல்லமுடியாத திருமா திக்கு தெரியாத காட்டில் நின்று சிக்கித்தவிக்கும் நிகழ்வுகள் ஒரு சில நாட்களாக தொலைக்காட்சிகளில் கொண்டாட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

Related posts

Top