சமூகப் போராளி திருமுருகன் காந்தியை கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள்.

மே 21 ம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை துக்க நினைவு நாளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்துவதற்காக மெரீனா கடற்கரையில் கூடியதற்காக மே 17 இயக்கத்தின் அமைப்பு செயலாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.

இரண்டுநாள் கழித்து, திருமுருகன் காந்தி குறைந்தது ஒரு வருட காலத்திற்கு வெளியில் வர முடியாதவாறு குண்டர் பாதுகாப்பு சட்டத்தில் அவரை சிறைப்படுத்துவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

காட்டுமிராண்டிகள் ஆட்சிசெய்யும் தேசத்தில் நீதி நேர்மைகளை எதிர்பார்க்கமுடியாது என்பது ஒருபக்கம் இருந்தாலும்,

சமூக அவலங்களை வெளிப்படுத்துவதற்காக செயற்படுகிறோம் என்று கூவிக்கொள்ளும் தமிழக காட்சி ஊடகங்கள், பொழுதுபோக்கு துறையான சினிமாவின் மூலமாக மக்களை சுரண்டி அதிக சமூக அவலங்களை சமூகத்தில் தோற்றுவிக்கும் சினிமா நட்சத்திரம் ரஜனிகாந்த் தனது அடுத்த சினிமா விற்பனைக்காக தனது ரசிகர்களை அழைத்து மூளைச்சலவை செய்த கிரந்தத்தனமான பேச்சை ஆயிரம் அர்த்தப்படுத்தி காலையும் மாலையும் விவாதம் செய்துகொண்டிருக்கின்றன.

Related posts

Top