வடமாகாண முதலமைச்சருக்கும் யாழ். மாவட்ட சமய தலைவர்களுக்கும் இடையில் திடீர் சந்திப்பு!!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்.மாவட்ட சமய தலைவர்கள் தற்போது சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை நடந்துள்ளது.

வடமாகாணத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Top