மண்முனை விபத்தில் மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு – ஆரையம்பதி மண்முனை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10.45 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்முனை வீதியில் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில், 17 வயதுடைய புவனசிங்கம் சதீஸ் என்ற மாணவன் உயிரிழந்துள்ளதுடன், 18 வயதுடைய கணேந்திரன் யோயல் என்ற மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

அதிகமான வேகமே விபத்துக்கு காரணம் எனவும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Top