14 வயது மாணவி கற்பழித்து ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கும்பல்

14 வயதான பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, ஓடும் ரெயிலில் இருந்து அந்த மாணவியை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக ரெயிலில் ஏற்றிச் சென்றது. அதன்பின், ஓடும் ரெயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டது.

கீழ தண்டவாளத்தில் கிடந்த மாணவியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியை சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் முதலில் மறுப்பு தெரிவித்தது. 6 மணி நேரத்துக்கு பிறகே அவரை மருத்துவமனையில் அனுமதித்தது.

தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீகாரில் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைக்குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவியை கற்பழித்த கும்பலை சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைக்குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியது, இந்த கொடூரமான குற்றம் செய்த குற்றவாளிகளை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய டி.எஸ்.பி. பங்கஜ் குமார் தலைமையிலான ஒரு குழு அமைக்கபட்டுள்ளது.

Top