மீண்டும் பரபரப்பு..சசிகலாவுடன் மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை, டிடிவி தினகரன் சந்திப்பு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்துபேசினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சந்தித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் முதல் அமைச்சர் பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், தம்பிதுரை சசிகலாவை சந்தித்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தம்பிதுரையை தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்து பேசினார்.

Related posts

Top