விக்னேஸ்வரன் ஆனந்தரங்கரி திடீர் சந்திப்பு!(காணொளி இணைப்பு)

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து அரசியலில் கைகோர்க்க தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஆனந்த சங்கரி,

தாம் முதலமைச்சருடன் அரசியல் பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சருடன் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

அது பொய்யானது எனக் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் (விக்னேஸ்வரன்) தலைமை ஏற்பாராயின் தாமும் இணைந்து செயற்படத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அவரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கு தலைமைத்துவம் வழங்கும் தகுதி அவர் ஒருவருக்கே உள்ளதாகவும் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், தமது கட்சியை பாதுகாக்கும் கடமை தமக்குள்ளதாகவும் ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

இதேவேளை, இது குறித்து முதலமைச்சரிடம் இப்போது பேசவில்லை என்றும், முன்னரே பேசியதாகவும் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

Related posts

Top