கேப்பாபிலவு நிலமீட்பு போராட்ட குழு தலைவர் கண்டனம்!

கொழும்பில் கடந்த 27ஆம் திகதி கேப்பாபிலவு நிலமீட்புக்காக நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் இலாபம் தேடும்நோக்கில் கலந்து கொண்டதாக அப்போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரலீலா என்ற பெண்மணி கூறிய கருத்து தவறானது என்றும் அவரது கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கேப்பாபிலவு நிலமீட்பு போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளரான வேலாயுதபிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்திற்கு கேப்பாபிலவு மக்கள் கலந்துகொள்வதில் தமிழ்த் தேசி யமக்கள் முன்னணியின் பங்களிப்பு இருந்தது என்பதனையும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கேப்பாபிலவு நிலமீட்புக்காக நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மூன்றரை லட்சத்திற்கும் (350000) அதிகமான நிதி உதவியை வழங்கி போராட்டத்திதை வலுப்படுத்த உதவியுள்ளமையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சந்திரலீலா யாருடைய தூண்டுதலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார் என்ற கேள்வி தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21ஆம் திகதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக கேப்பாபிலவு காணிவிடுவிப்பை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திலிருந்து இன்று வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேப்பாபிலவு காணிவிடுவிப்பு தொடர்பில் மக்கள் நடாத்தும் போராட்டத்தில் பக்கபலமாக இருந்துவரும் நிலையில் அவர்களது பங்களிப்பை முற்றுமுழுதாக மூடிமறைத்து கருத்து வெளியிட வேண்டிய தேவை சந்திரலீலாவுக்கு ஏன் ஏற்பட்டது.

அன்று அந்தப் போராட்டம் நடைபெற்றபோது சந்திரலீலா அப்போராட்டத்தை குழப்புவதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு முடியாத நிலையில் இறுதியில் அப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தளப்பட்டிருந்தார்.

சந்திரலீலா கருத்துகூறியதும் முதலில் இக்கருத்தை தனது முகநூல் தரவேற்றம் செய்த நபர் மிகத் தீவிரமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார். அவர் ஒரு அரசியல் கட்சியில் அங்கத்தவராவார். யுத்த முடிவில் பெருமளவான போராளிகளையும் பொது மக்களையும் இராணுவத்தினரிடம் காட்டிக் கொடுத்ததன் மூலம் தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.

தற்போதும் இராணுவ உளவுத்துறைக்காக அவர்களிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு செயற்படும் அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது சேறு பூசும் பிரசாரத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதுவும் சமஸ்டித் தீர்வு வருகிறது என்னும் பெயரில் புதிய அரசியல் யாப்பினை பொதுசன வாக்கெடுப்புக்கு விட்டு தமிழ் மக்களின் ஆணை எடுப்பதற்கு சிறிலங்கா அரசு கூட்டமைப்புடன் இணைந்து சதி முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சந்திரலீலாவும் குறித்த இராணுவ உளவுத்துறை முகவராக செயற்படும் முன்னாள் போராளியும் மேற்கொண்டு வரும் சேறுபூசல்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

Related posts

Top