வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் தருணம் வந்துவிட்டது: ட்ரம்ப்

வடகொரியாவின் செயல்கள் தொடர்பில், பொறுமை காத்து வந்த காலம் மாறிவிட்டது எனவும் தற்போது அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் தருணம் வந்துவிட்டது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் உரையாற்றுகையில், ‘வடகொரியாவின் பொறுப்பற்ற மற்றும் மிருகத்தனமான நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. வடகொரியா தனது நடவடிக்கைகளை இனிமேலாவது நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், குறித்த விடயம் தொடர்பில் வடகொரிய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு தொடர்பில் தென்கொரியா இனிவருங்காலங்களில் சீர்திருத்தங்களை உருவாக்கும் எனவும் தனது சுய பாதுகாப்பை உறுதி செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Top