தேர்தல் காலத்தில் மேடையில் பேசும் பேச்சை நடைமுறைப்படுத்த முடியாது!(காணொளி இணைப்பு)

தேர்தல் காலங்களில் மேடைகளில் பேசப்படும் பேச்சு தேர்தலில் வெல்வதற்காக மட்டுமே, நிர்வாக ரீதியில் அதனை நடைமுறைப்படுத்தமுடியாது என தமிழரசுக் கட்சியின் பொருளாளரும், மூத்த உறுப்பினருமான குலநாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமாகாண சபையில் இடம்பெற்ற அரசியல் குழப்பம் தொடர்பாக தமிழரசுக் கட்சி இளைஞர் அணிக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்றையதினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் பொருளாளரும், மூத்த உறுப்பினருமான குலநாயகம் உரையாற்றுகையில், தேர்தல் காலங்களில் நாங்கள் மேடையில் பேசும் பேச்சானது, தேர்தலில் வெல்வதற்கு மாத்திரந்தான். அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது எனத் தெரிவித்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இடையில் எழும்பி ஏதோ கூறியதும் அவர் உரையை நிறைவு செய்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சரவணபவன், சுமந்திரன் மற்றும் மாகாணசபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம்மற்றும் தமிழரசு கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

Related posts

Top