பகிரங்க விவாதத்திற்கு சவால் விடுத்தார் கஜேந்திரகுமார்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரையும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழப்பாணத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் தங்களிடம் மக்கள் கேள்வி கேட்பதாயின் காலையினில் நேரகாலத்துடன் கேள்விகளை முன்னராக தந்துவிடவேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாவென கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பதிலளித்த அவர் அது தமிழ் தேசியக்கூட்டமைப்பு விதித்துள்ள நிபந்தனை.தவறாக எமது கட்சியென சொல்கிறீர்கள்.நாம் தொடர்ந்து மக்கள் சந்திப்புக்களினை நடத்திவருகின்றோம்.மக்களது கேள்விகளிற்கு பதிலளிக்கின்றோம். பலரும் மாகாணசபை விவகாரம், அரசியல் தீர்வுதிட்ட வரைபு போன்றவை தொடர்பினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரையும் பகிரங்க விவாதத்தில் சந்திக்க தயாரா என கேட்டுவருகின்றனர்.

நான் இப்பத்திரிகையாளர் சந்திப்பினில் சவால் விடுகின்றேன்.மக்கள் முன்னிலையினில் அல்லது ஊடகவியலாளர்கள் முன்னிலையினில் அத்தகைய விவாதத்திற்கு கூட்டமைப்பினர் தயாராவென அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனிடையே அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தமிழரசுக்கட்சி தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைப்பதற்கான முனைப்புக்களிலும் தீவிரம் காட்டிவருகின்ற அதேவேளையில் மக்கள் சந்திப்புக்களை தொடங்கியுள்ளது.

நடைபெற்றுமுடிந்த வடக்குமாகாணசபை நெருக்கடி நிலையினை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முற்பட்டு தோல்விகண்ட தமிழரசுக்கட்சி தற்போது தங்கள் மீதான விமர்சனங்களை ஈடுசெய்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது.
யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஏற்பாடாகியிருக்கின்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் சுமந்திரன், சிறிதரன் மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இருப்பினும் முக்கிய நிபந்தனையாக கேள்விகள் எழுத்துமூலமே வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டே அழைப்பிதழ் கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top