ஜேர்மனியில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இடம்பெறலாம் -புலானய்வு அமைப்பு எச்சரிக்கை

ஜேர்மனி மேலும் பல இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராகயிருக்கவேண்டும் என அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2016 இல் ஜேர்மனியில் ஐந்து இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன ஏழு தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என ஜேர்மனியின் உள்நாட்டு புலானய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தனிநபர்கள் மற்றும் பயங்கரவாத குழுக்களிடமிருந்து மேலும் தாக்குதல்களை எதிர்பார்க்கவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால் இஸ்லாமிய தீவிரவாதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜேர்மனியின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் அதுவே பெரும் சவாலாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியின் உள்நாட்டு புலானய்வு அமைப்பின் 2016ற்கான வருடாந்த அறிக்கை 24000 இஸ்லாமிய தீவிரவாதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் ஆபத்து குறைவடையவில்லை மாறாக அது வன்முறையும் பயங்கரவாதமும் மிகுந்ததாக மாறியுள்ளது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் ஜேர்மனிக்குள் நுழைந்துள்ள ஓரு மில்லியன் குடியேற்றவாசிகளுடன் நூற்றுக்கணக்கான ஜிகாத் தீவிரவாதிகளும் நுழைந்துள்ளதாகவும் ஜேர்மனியின் உள்நாட்டு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

Top