பெங்களூர் சிறையில் தினகரன் – அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் உள்ள சகிலாவை டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கட்சியில் நிலவும் குழப்பங்கள் குறித்து தினகரன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அவருடன் அதிமுக கர்நாடக செயலாளர் புகழேந்தி மற்றும் நடிகர் ரித்திஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் தினமும் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் தினகரன் அடிக்கடி பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்.

இதுவரை 5 முறை இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். மேலும் குடும்பத்தில் தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோருக்கு இடையிலான பிரச்சனை குறித்தும் இந்த சந்திப்ப்பின்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts

Top