வடகொரியாவின் ஏவுகணை சோதனை உலக நாடுகளுக்கான புதிய அச்சுறுத்தல்: அமெரிக்கா

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய வகையிலான வடகொரியாவின் ஏவுகணை சோதனையானது, அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்குமான புதிய அச்சுறுத்தல் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், அணு ஆயுதங்களை கொண்ட வடகொரியாவை வொஷிங்டன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய வகையில் வடகொரியாவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையானது, எண்ணெய் கிணறுகள் அதிகம் உள்ள அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தையும் தாக்கும் வல்லமை கொண்டது என அமெரிக்கா உறுதிபடுத்தியுள்ளது.

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை வெற்றிகரமாக சோதனை செய்ததாக நேற்று அறிவித்த பியோங்யாங், அச்சோதனையானது தமது துல்லியமான திறனை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது என அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் ஏவுகணைகளை ஏவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Top