மத்திய ஆப்பிரிக்காவில் சாலை விபத்து : 78 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு ஒன்றில் நிகழ்ந்த சாலை விபத்தில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உள்ள பம்பரி மற்றும் இப்பி பகுதிகளுக்கு இடையே நிகழ்ந்த சாலை விபத்தில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த 60 பேரின் உடல்கள் பம்பரியில் உள்ள மருத்துவமனையில் உள்ள பிணவறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. 18 பேரின் உடல்களை, உறவினர்கள் வந்து பெற்று சென்றதாகவும் மருத்துவமனை நிர்வாகி மைக்கேல் சாகான்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாலோம் பகுதியில் உள்ள சந்தையில் பொருள் வாங்கச் சென்ற மக்கள் மீது 10 சக்கரங்களை கொண்ட சரக்கு ஏற்றிக் கொண்டு சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

லொறியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Top