ஈரானில் ஐ.எஸ். அமைப்பினர் 21 பேர் கைது!

ஈரானில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டு நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) ஈரானின் வடகிழக்கு நகரான மஷஹட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர் என்று மஷஹாட்டின் துணை வழக்கறிஞர் ஹசான் ஹைதரி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஈரானைச் சேர்ந்தவர்களும் ஆப்கானைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும், இவர்கள் அனைவரும் போலி ஆவணங்களை காட்டி நாட்டினுள் நுழைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தலைநரான தெஹ்ரானில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஈரானிய உறவுத்துறை படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் ஒருபகுதியாக நேற்று இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Top