ஐரோப்பிய நாடுகளில் முக்காடு அணிய தடை- ஐரோப்பிய நீதிமன்றம்

பொது இடங்களில் முக்காடு போடுவதற்கான பெல்ஜியத்தின் தடை உத்தரவினை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பெல்ஜிய மத்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட இத்தடையின் காரணமாக, மொறோக்கோ நாட்டினைச் சேர்ந்த இரு இஸ்லாமியர்கள் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் கைது, தனி மனித வழிபாட்டு மத உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை எனத் தெரிவித்து, பெல்ஜியம் விதித்திருந்த தடைக்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெல்ஜிய அரசாங்கத்தின் தடையினை உறுதிசெய்துள்ளது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு, இவ்வகையான தடைகளை விதித்துள்ள மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தினை முற்றாக மறைக்கும்படியான முக்காடுடன் பொது இடங்களில் நடமாடுவதற்கு பல ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ளது.

இதற்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Top