அதிமுக அம்மா அணி எம்எல்ஏ.க்களை உடனடியாக சென்னைக்கு வர உத்தரவு!

‘சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும்’ என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல், வரும் திங்களன்று (ஜூலை 17) நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பாக பீகாரில் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை வேட்பாளராக அறிவித்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிட இருக்கிறார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த மூன்று அணிகளும் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த எம்ஏல்ஏ-க்கள் அனைவரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சென்னைக்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. திங்களன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. அம்மா அணி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Related posts

Top