சிறீலங்கா கடற்படையால் 7 தமிழக மீனவர்கள் கைது!

சிறீலங்கா கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி ஏழு இந்திய மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏழு தமிழக மீனவர்களுடன் இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Top