தமிழர் பகுதிகளில் தொடரும் சிங்கள குடியேற்றங்கள்!

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்குக் கிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாரம் பரிய தமிழர் கிராமமான நொச்சிக்குளத்தில் இரவோடு இரவாக புத்த சிலை அமைக்கும் பணி இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நொச்சிக்குளம் வவுனியா – திருகோணமலை வீதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகக் கிராமமாகும். இக்கிராமத்தை ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக அங்கு பெயர்ப்பலகை ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், சிலையொன்று வைத்து அதற்கான ஆரம்ப சமய அனுட்டானங்கள் நடைபெற்றுள்ளன.

அத்துடன் வவுனியா – திருகோணமலை எல்லையில் பொப்பசவேவா எனும் பெயரில் 800 சிங்களக் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Top