அம்மா உணவகங்களை மூட எடப்பாடி அரசு திட்டம்?

சென்னை மாநகராட்சிக்கு வருவாய் குறைந்ததால் தற்போது உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டம் அம்மா உணவகம்.

சென்னை நகரில் அனைத்து வார்டுகளை சேர்த்து 407 அம்மா உணவங்களை மாநகராட்சி திறந்தது. இதற்கு தேவைப்படும் நிதியை தமிழக அரசு வழங்கிவந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 200 அம்மா உணவகங்களை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வேறு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்கள், கட்டிட தொழிலாளிகள், ஏழை மாணவர்கள் என அனைவரும் மலிவு விலையில் தரமான உணவை வழங்கிவந்த திட்டம் அம்மா உணவகம். பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தை முன்னோடியாக எடுத்துக்கொண்டு அரசு உணவக திட்டத்தை செயல்படுத்தின. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் மூலம் வந்த வருவாய் இழப்பின் காரணமாக அம்மா உணவகங்களை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

Top