தம்பி சரவணபவனுக்கு ஒரு மடல்… கொள்ளையர்களைப் பற்றி கொள்ளையன் கதைப்பதா?

கொள்ளையர்களைப் பற்றி கொள்ளையன் கதைப்பதா?

தம்பி சரவணபவன் எம்.பியின் அறிக்கையை வாசித்தவுடன் எனக்குள் உதித்த தலைப்பு இது.

‘மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும். அந்த அணியினரின் தலையில் தமிழ் மக்கள் இறுக்கிக் குட்டி அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அடக்க ஒடுக்கமாக இருக்கச் செய்ய வேண்டும்’ – என்று தம்பி அறிக்கையில் சொல்லியிருந்தார். அதற்காக அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை பல விதங்களில் – பல இடங்களில் குற்றம் சொல்லியிருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் கடந்தகால செயற்பாடுகள் நியாயப்படுத்த முடியாதவைதான். அவை பற்றி நான் இங்கு அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மீது பிழை – குற்றம் கண்டுபிடிக்கும் யோக்கியதை தம்பி சராக்கு உண்டு என்பதுதான் எனது கேள்வி!

ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முதல், நீங்கள் சப்ரா வங்கி மூலம் சட்னி அரைத்தமையை மறந்துவிட்டீர்களா?

உங்களை நம்பி பணத்தை வைப்பிலிட்டவர்களில் சிலர், நீங்கள் ஏமாற்றியமை தெரிந்து தற்கொலை செய்துகொண்டமை தம்பிக்கு தெரியாமல் இருந்துவிடப்போவதில்லை.

புலிகள் இருக்கும் மட்டும் பொய்யராய் நடித்துவிட்டு இன்று அரசியலில் யாரோ எழுதித் தந்ததை எங்களுக்கு பிரேம் போட்டு காட்டுகின்றீரா?

ஐ.தே.கவின் ஆதரவாளனாக இருந்த நீர், தமிழரசு கட்சி அங்கத்துவம் பெற்றவுடன் புனிதன் ஆகிவிட்டீர் போலும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உமக்கு இடம் தரப்படாமல் விட்டிருந்தால், உமது பத்திரிகையும் நீரும் ‘ஒரு நாடு இரு தேசம்’ என கூச்சலடித்திருப்பீர்கள்.

தமிழ் மக்கள் உங்களை எப்பவோ இறுக்கிக் குட்டி அடக்கியிருப்பார்கள். ஆனால், நீங்கள் ஓடி ஒளிந்து தப்பி இருந்துவிட்டு புலி ஆதரவு என்ற பிம்பத்திற்குள் மறைந்து தப்பித்துக்கொண்டுவிட்டீர்கள்.

ஊடகவியலாளர்களின் உயிர்த்தியாகத்தில் வளர்ந்த உதயனின் வெள்ளிவிழாவின்போது, யாழில் பல படுகொலைகளின் சூத்திரதாரியாக இனங்காணப்பட்டவரும் பல ஊடகவியலாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவருமான அப்போதைய யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்கவை வைத்து மங்கல விளக்கேற்றியதையும் மறந்துவிட்டீரா தம்பி.

கடந்த பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் நீங்கள் அருந்தவபாலனின் வெற்றியைத் தட்டிப்பறித்ததை எல்லோருமே அறிவார்கள்.

மற்றையவர்களின் குற்றங்களை காண முதல், அதற்கான தகுதி உங்களிடம் உண்டா என ஒரு தடவைக்கு பல தடவைகள் யோசிப்பது உங்களுக்கு அழகு தம்பி சரா அவர்களே!!

பெரியதம்பி அகிலன்
Pakilan@yahoo.com

Top