அம்பாறையில் கொடூரம் : மனையியை அடித்துக் கொலைசெய்த கணவன் கைது!

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் இன்று (சனிக்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் முதலாம் பிரிவு முனையக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 40 வயதுடைய இளையதம்பி யோகேஸ்வரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தில் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் இருந்த முறையற்ற தொடர்பு காரணமாக இன்று காலை 9 மணிக்கு இரு பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது உயிரிழந்த பெண்ணின் கணவர் தேங்காய் உரிக்கும் கம்பியால் மனைவியின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்தில் மனைவி உயிரிழந்ததையைடுத்தே தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவனை பொலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

Top