திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றம்: போராட்டத்திற்காக முல்லைத்தீவை நோக்கி படையெடுக்கும் மக்கள்

வட. மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இனப் பரம்பலை சிதைக்கும் வகையிலான சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்று இன்று நடத்தப்படவுள்ளது.

‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாபெரும் எதிர்ப்புப் பேரணி முல்லைத்தீவில் நடத்தப்படவுள்ளது.

இயற்கை சமநிலையை குழப்பும் விதமான சட்டவிரோதக் குடியேற்றங்களை தடை செய்யுங்கள் என்பதை வலியுறுத்தி, முள்ளியவளை காட்டா விநாயகர் கோவிலிலிருந்து கூழாமுறிப்பு நோக்கி குறித்த பேரணி இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு கிராமத்துக்கு அருகில் உள்ள முள்ளியவளைக்கும் – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட 177 ஏக்கர் வாரிவண்ணான் காட்டை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்றம் செய்யும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top