வவுனியாவில் விபத்து: இருவர் படுகாயம்

வவுனியா ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தும் வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Top