சிங்கள மீனவர்களிற்காக கிளர்ந்தெழும் செல்வம்!

தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை இனியும் பொறுத்துக்கொள்ளப்போவதில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாய்திறந்துள்ளார்.இதேவேளை எமது எதிர்ப்புக்கள், போராட்டங்கள் மூலமாகவே தென்னிலங்கை மீனவரின் அட்டூழியங்களை நிறுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது பிரதேசங்களை பல வழிகளில் அபகரிக்கும் நிலை காணப்படுகிறது. எமது நிலங்கள் கடல்களை சூறையாடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் இராணுவத்தின் கெடுபிடி அதிகரித்துள்ளது.
கரையோர சட்டங்கள் புதிதாக நடைமுறைப்படுத்தும் நிலையிலும் தென்னிலங்கை மீனவர், இந்திய மீனவர் வருகை இப்போது வரை குறையவில்லை. வரவு அதிகரித்துள்ளது.

இந்திய மீனவரை கைது செய்தல் மற்றும் அவர்களின் படகுகளை தடுத்து வைத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகள் நடை பெற்றாலும். தென்னிலங்கையில் இருந்து வந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீன வர்கள் பற்றி எவரும் கண்டுகொள்ளவில்லை.

இது தொடர்பான சட்டத்தை இயற்றும் போதும் அந்த மீனவர்கள் தொடர்பாக கண்டும் காணாத சூழல் காணப்படுகிறது. அதை எம்மால் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

எனவே தென்னிலங்கை இருந்து வந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கும் இந்திய மீனவர் வருகையை முற்று முழுதாக நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும் இந்த முயற்சி சாதாரணமாகவோ உடனடியாகவோ செய்யக்கூடிய விடயம் என இதை நாம் பார்க்க முடியாது.
போராட்டங்கள், எதிர்ப்புக்கள் ஊடாகத் தான் எமது உரிமைகளைபெற முடியும் அதுவே எமது வரலாறாகவும் உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு கரையோரப்பகுதி களில் மேற்கொள்ளப்படும் தென்னிலங்கை மீனவரின் சட்டவிரோத மீன்பிடி தொழில் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Top