ரணிலின் பதவியை குறிவைக்கும் மகிந்த அணி – பதவி விலக வலியுறுத்தல்!

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி மகிந்த ராஜபக்ஷவை அப்பதவிக்கு நியமிக்கவேண்டுமென பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கோரிக்கைக்கு பதில் கிடைக்காது விடின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட 18 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி கூட்டு எதிரணியில் இணையப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அருந்திக்க பெர்னாண்டோ ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தாம் கடந்த 12நாள் இது குறித்து ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியதாகவும், அவர் இந்த யோசனையை எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை கைவிடும்படியும் கேட்டிருந்தார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கினால் அதற்கான மாற்று ஏற்பாடு என்னவென ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தம்முடனான கலந்துரையாடலின் போது கேட்டிருந்தார்.

அதற்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க தமது குழு விரும்புவதாகவும் பெரும்பான்மையானோரது விருப்பமும் அதுவே என தான் அவரிடம் கூறியதாக பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Top