வடக்கு போக்குவரத்து அமைச்சராக விந்தன் கனகரட்ணம்!

வடமாகாண போக்குவரத்து அமைச்சராக விந்தன் கனகரட்ணத்தின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரெலோ அமைப்பின் அரசியல் குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்ற வேளையில் இறுதி முடிவெட்டப்படாதிருந்தது.

இதனையடுத்து இன்று இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு விந்தன் கனகரட்ணத்தின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடமாகாணத்தில் இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலை காரணமாக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு முதலமைச்சரால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த போதிலும் இருவரும் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.

அத்துடன் அமைச்சர் டெனீஸ்வரன் தனது கட்சியின் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லையென்ற குற்றச்சாட்டின்பேரில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியினால் விந்தன் கனகரட்ணத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related posts

Top