வவுனியாவில் இளைஞரின் தாக்குதலால் வயோதிபர் உயிரிழப்பு

வவுனியாவில் நேற்று (16.07) இரவு 9.45மணியளவில் இளைஞர் ஒருவர் வயோதிபர் மீது தாக்குதல் நடத்தியதில் வயோதிபர் உயிரிழந்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஞாயிற்றுக்கிழமை இரவு வவுனியா நேரியகுளம் பகுதியில் வயோதிபருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது இளைஞன் தனது கையிலிருந்த தலைக்கவசத்தினால் வயோதிபர் மீது தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த வயோதிபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த சிமைல் தாம்டீன் (64 வயது) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார். தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நேரியகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

Top