வவுனியாவிற்கு மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் பொலிஸாரால் கைது!

செட்டிக்குளத்திலிருந்து, வவுனியாவிற்கு மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் இன்று நெளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு கடத்திச் செல்லப்பட்ட மாடும், அதை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெளுக்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை வாகனம் ஒன்றை மறித்து பொலிஸார் சோதனையிட்ட போது அந்த வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் மாடு கொண்டு செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

Related posts

Top