மீண்டும் சூடுபிடிக்கும் சசிகலா விவகாரம் – சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை?

பெங்களூர் அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து கர்நாடகா சிறைத்துறை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிற்கு அங்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரி ரூபா தகவல் வெளியிட்டிருந்த நிலையில், சசிகலாவை கர்நாடகாவிலுள்ள வேறு சிறைக்கு மாற்றுவது அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடகா அரசு ஆலோசித்து வருகின்றது.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சசிகலா விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவமானது, தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாதென கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இந்நிலையில், சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதா என்பது குறித்து ஆராய, உயர்மட்ட விசாரணைக்கும் கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

Top