தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான நிலையத்தை பயன்படுத்தும் சிறீலங்கா ராணுவத்தினர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையினரால் உருவாக்கப்பட்ட இரணைமடு இராணுவ விமான நிலையம் தற்போது இலங்கை விமானப் படையினரின் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை விமானப் படையினரின் முக்கிய போர் விமானங்கள் குறித்த விமான நிலையத்திலேயே தரையிறங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விமானப் படையினரின் விசேட உலங்கு வானூர்தியொன்று இன்று இரணைமடு விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top