சிறிதரனுடன் சவால் விடுகிறார் ஜேர்மன்தொழிநுட்ப வல்லுநர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தொலைபேசி உரையாடலை தன்னால் உறுதிப்படுத்தமுடியும் என ஜேர்மன் தொழிநுட்பவியலாளர் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடகவியலாளர் ஒருவரை மிகவும் கீழ்த்தரமாக வடக்கத்தையான் எனத் திட்டிய ஒலிவடிவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து, அவர் நேற்று மலையக மக்களைச் சந்தித்து தனது உரையாடலை தற்போதுள்ள தொழிநுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்துமாறும், அவ்வாறு உறுதிப்படுத்தினால் தான் பதவி விலகுவதாகவும் சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், சிறிதரனின் சவாலினை ஜேர்மனியின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சுவுடு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிவரும் வொய்ஸ் அனலைசிஸ் (Voice Analysis) துறையில் பாண்டித்தியம் பெற்ற பொறியியலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவர் தான் இதனை உறுதிப்படுத்துவதாகவும், அதற்கு முன்னர் இதனை நிரூபித்தால் 24 மணிநேரத்துள் பதவி விலகுவேன் என கையொப்பமிட்டு சபாநாயகரினூடாக உறுதிப்படுத்திய கடிதத்தை தருமாறும் அவர் கோரியுள்ளார்.இல்லையேல் அதுவும் நான் சொல்லவில்லை என இன்னொரு காணொளியூடாக நீங்கள் சொல்வீர்கள் என்பதால் இந்த கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் உங்களின் கடிதம் கிடைத்ததும் உத்தியோகபூர்வமாகவும், சட்டரீதியாகவும் உறுதிப்படுத்தி வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

Related posts

Top