இறுதி யுத்தத்தின் எச்சங்களைப் பார்வையிட்டார் பப்லோ டி கிரீப்!

இலங்கைக்கு பயணம்மேற்கொண்டுள்ள ஐநாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை விசேட நிபுணர் பப்லு டி கிரீப் இன்று அதிகாலை முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குச் சென்று யுத்த எச்சங்களைப் பார்வையிட்டுள்ளதுடன், முல்லைத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் உயிரிழந்த மக்களுக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நினைவுக் கற்களையும் பார்வையிட்டார்.

நேற்று திருகோணமலைக் மாவட்டத்திற்கு பயணம் செய்திருந்து ஐநாவின் விசேட நிபுணர் பப்லு டி கிரீப் இன்று அதிகாலை முள்ளியவளைக்குப் பயணத்தினை மேற்கொண்டு, யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவுள்ளார்.

முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் மேற்கொண்ட அவர் முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்துள்ள சின்னப்பர் தேவாலய வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களையே பார்வையிட்டுள்ளதுடன் அங்கு காணப்பட்ட போரின் எச்சங்களையும் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, காணாமலாக்காப்பட்ட உறவுகள் ஐநாவின் விசேட நிபுணரிடம் மனுவொன்றையும் கையளித்தனர். போரின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயவே ஐநா விசேட நிபுணர் இலந்கை வந்திருந்தார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்