முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்தும் தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற நிலையில் தீர்வு கிடைக்கும் வரை போரட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவிக்கின்றனர்.
யுத்த காலத்தில் வலிந்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்கள் இதுவரை தமக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றும் 224 நாட்கள் ஏக்கத்துடன் கடந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி அடை மழைக்கு மத்தியிலும் தொடர்கின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்