காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை சிறீலங்கா ஜனாதிபதி அழைத்து வருவார் என எதிர்பார்க்கின்றோம்!

காணாமல் ஆக்கப்பட்டு பின்னர் சிறீலங்கா ஜனாதிபதியுடன் புகைப்படமொன்றில் காணப்படும் தமது பிள்ளைகளையும் சிறீலங்கா ஜனாதிபதி வவுனியாவிற்கு அழைத்து வருவார் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம் என தமிழர் தாயகப்பிரதேசத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

சிறீலங்கா ஜனாதிபதி வவுனியா வரவுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்று 239வது நாளாகவும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். நாம் சர்வதேசத்தின் உதவியையே நாடி நிற்கின்றோம். எனினும் நிலையில் வவுனியாவிற்கு சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வருகை தரவுள்ளார்.

எனவே, வவுனியாவிற்கு வருகின்ற சிறீலங்கா ஜனாதிபதி நாம் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம். அவ்வாறு வருகின்ற சிறீலங்கா ஜனாதிபதி அவருடை தேர்தலின் போது பிரசுரமான படத்தில் நிற்கும் காணாமல் போன ஐந்து பிள்ளைகளில் ஒருவரையாவது கொண்டு வந்து ஒப்படைப்பார் என நம்புகின்றோம். எமது இந்த நம்பிக்கை உடைக்கும் பட்சத்தில் எமது இந்த போராட்டம் இன்னும் மேலோங்கி பெரியதொரு போராட்டமாக மாறும் எனவும் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, இன்று
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென யாழ் பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று
இலங்கையில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*