சிவாஜிலிங்கத்தை ஏமாற்றினார் சிங்களச் சட்டத்தரணி!

தமிழ் அரசியல்கைதிகளின் வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில், அரசியல் கைதிகள் சார்பில் முன்னிலையாகவிருந்த சிங்களச் சட்டத்தரணி முன்னிலையாகாததால் குறித்த மூன்றுஅரசியல் கைதிகளின் வழக்குகள்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே; சிவாஜிலிங்கம் தான் தமிழ் சட்டத்தரணிகள் எவரையும் குறித்த கைதிகளின் வழக்கில் முன்னிலையாவதற்கு கோரப்போவதில்லையெனவும், தனக்கு கைதிகளைப் பார்வையிடுவதற்கு முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர் இலவசமாக உதவியதாகவும், சிங்களச் சட்டத்தரணி ஒருவர் கைதிகள் சார்பாக முன்னிலையாவதற்கு முன்வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றையதினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கைதிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை. இதனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க சிறிது கால அவகாசம் எடுக்கும் என தெரிகிறது.

அரசியல்கைதிகள் சார்பில் சட்டத்தரணி இரட்ணவேல் முன்னிலையாகிவந்த நிலையில், அவரை தவிர்த்து சிங்கள சட்டத்தரணியொருவர் மூலம், கைதிகளின் வழக்கு இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்